×

520 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.13 லட்சம் மின் கட்டணம்! அதிர்ச்சியில் உறைந்த மெக்கானிக்

 

 

புதுச்சேரியில் 520 யூனிட் மின்சாரத்திற்கு 12 லட்சத்து 91 ஆயிரத்து 845 ரூபாய் மின் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்த  முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் இவர் விஸ்வநாதன் நகரில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக டிவி மெக்கானிக்காகாகவும், இரவு நேரத்தில் வாட்ச்மேன் ஆகவும் வேலை செய்து வருகிறார். ஏழ்மையான நிலையில் குடும்பம் நடத்தி வரும் சரவணன் வீட்டில், மின்சாதன ஆடம்பர பொருட்கள் ஏதும் இல்லை. கடந்த மாதம் 3 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்த சரவணன் வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மாத மின் கட்டண பில் குறிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த மாதம் 520 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது‌. அதற்கான தொகையாக 12 லட்சத்தி 91 ஆயிரத்து 845 ரூபாய் என குறிக்கப்பட்டு பில் வந்துள்ளது.

இதை கண் சரவணன் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக மின்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அதிகாரிகள் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாகவும் மெத்தன போக்குடன் தன்னை அலைகழித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் செக்யூரிட்டியாக பணிபுரியும் ஒருவர் வீட்டிற்கு 12 லட்சத்து 91 ஆயிரத்து 845 ரூபாய் மின் கட்டணம் வந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சரவணன் கூறுகையில்,  “தான் குடியிருக்கும் தெருவிளக்கே வசூலிக்க வேண்டிய தொகையை எனது ஒரு ஆளுக்கு மட்டும்  மின் கட்டணமாக மின்துறை விதித்துள்ளது. இது மின்துறையின் அலட்சியத்தை காட்டுகிறது. மேலும் மின் மீட்டரில் 5டிஜிட்டல் மட்டுமே எண்கள் இருக்கும். ஆனால் ஆறு டிஜிட்டில் தனக்கு மின் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக  அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால், சரியான பதில் சொல்லாமல் தன்னை அலைக்கழிக்கின்றனர்” எனக் குற்றம் சாட்டினார்.