×

ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்பட பல ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தீயணைப்புத்துறை டி.ஜி.பியாக கரண் சின்ஹா நியமனம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் நியமனம் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாராக வருண்குமார் நியமனம் குடிமை பொருள்
 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்பட பல ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி,

தீயணைப்புத்துறை டி.ஜி.பியாக கரண் சின்ஹா நியமனம்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் நியமனம்

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாராக வருண்குமார் நியமனம்

குடிமை பொருள் வளங்கள் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமனம்

சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக சீமா அகர்வால் நியமனம்

காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் நியமனம்

முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏகே விஸ்வநாதன் தமிழ்நாடு அரசு போலீஸ் வீட்டு வசதி துறைக்கு இடமாற்றம்

கடலோர பாதுகாப்புக்கு சந்தீப் மிட்டல் மாற்றப்பட்டு உள்ளார்”