#BREAKING 12 டிஎஸ்பி, உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம்
Nov 11, 2025, 21:57 IST
தமிழ்நாடு முழுவதும் 12 டி.எஸ்.பி.க்கள்/ உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை காவல் ஆயுதப்படை உதவி ஆணையராக பணியாற்றிய சுப்பிரமணியம், கோயம்பேடு போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை உதவி ஆணையர் முருகராஜ், கொளத்தூர் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கும் கோயம்புத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் தென்னரசு, நீலகிரி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளார்.தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ராஜா, திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி போக்குவரத்து காவல் உதவி ஆணையர் முகமது ரஃபி, தூத்துக்குடி ஆயுதப்படை துணை டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.