×

ரேஷன் கடைகளுக்கு 2022ம் ஆண்டில் 12 நாட்கள் விடுமுறை!!

 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசின் பொதுவிநியோக திட்டத்தின் படி அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த சூழலில் தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நியாயவிலை கடைகளுக்கு வருகின்ற 2022 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் பண்டிகை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2022ஆம் ஆண்டில் 12 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஜனவரி 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை, ஜனவரி 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தைப்பூசம், ஜனவரி 26 ஆம் தேதி புதன்கிழமை குடியரசு தினம் ,ஏப்ரல் 14ஆம் தேதி வியாழக்கிழமை தமிழ் புத்தாண்டு ஆகிய தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம், மே மாதம் 3ஆம் தேதி ரம்ஜான் ,ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி ,அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 5ஆம் தேதி விஜயதசமி , அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி, டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் என மொத்தம் 12 நாட்கள் விடுமுறை என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.