×

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு - திருப்பூர் முதலிடம்!
 

 

11ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்களில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  மாணவர்கள் 86.99 சதவீதமும்,  மாணவிகள் 94.36% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.37% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது .96.38 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ள நிலையில்,  ஈரோடு 96.18 சதவீதமும்,  கோவை மாவட்டம் 95.73 சதவீதமும் பெற்றுள்ளது.  அரசு பள்ளிகளை பொருத்தவரை 84.97% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் 93.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் , இந்த ஆண்டு 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.  தேர்வு எழுதிய 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 பேரில் , 7 லட்சத்து 6,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

+1 தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்

➤ திருப்பூர் - 96.38%

➤ ஈரோடு - 96.18%

➤ கோவை - 95.73%

➤ நாமக்கல் - 95.60%

➤ தூத்துக்குடி - 95.43%

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதே போல ஆங்கிலத்தில் 13 பேர் ,இயற்பியலில் 440 பேர் ,வேதியியலில் 17 பேர் ,உயிரியலில்  65 பேர், கணிதத்தில் 17 பேர்,  தாவரவியலில் 2 பேர் , விலங்கியலில் 34 பேர், கணினி அறிவியல் 940 பேர், வணிகவியலில் 214 பேர் ,கணக்குப்பதிவியலில் 995 பேர் ,பொருளியலில் 40 பேர், கணினி பயன்பாடுகளில் 598 பேர், வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் 192 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சதம் அடித்துள்ளனர்.