×

சட்டமன்ற தேர்தல்: அதிரடியாக செயல்படும் 112 குழுக்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்ந்து சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த 112 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, சுகாதாரம், வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன. தனியார் கட்டடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், ஓவியங்கள் ஆகியவற்றை 72 மணி நேரத்திற்குள் அளித்து அகற்ற வேண்டும். ஆனால் சோழிங்கநல்லூர், அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் அரசியல் கட்சிகள் போதிய ஒத்துழைப்பு வழங்காததால் தேர்தல்
 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்ந்து சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த 112 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி, சுகாதாரம், வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன. தனியார் கட்டடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், ஓவியங்கள் ஆகியவற்றை 72 மணி நேரத்திற்குள் அளித்து அகற்ற வேண்டும். ஆனால் சோழிங்கநல்லூர், அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் அரசியல் கட்சிகள் போதிய ஒத்துழைப்பு வழங்காததால் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக அமல்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் ஆயிரக்கணக்கான கொடிக்கம்பங்கள் உள்ளன. இவற்றில் சில நூறு தான் முறையாக அனுமதி பெற்றவை. மீதமுள்ள கம்பங்கள் அனுமதி பெறாமல் நடப்பட்டுள்ளன. முன்பு 15 முதல் 30 அடி உயரம் வரை கொடிக்கம்பங்கள் இருந்தன. அவற்றை கட்சிகளும் நாங்களும் எளிதாக அகற்றினோம். தற்போது பல கம்பங்கள் 50 முதல் 60 அடி உயரம் கொண்டவை. இவற்றை அகற்ற கட்சிகளிடம் கூறினால் அவர்கள் அலட்சியமாக உள்ளனர். எங்களிடம் போதிய உபகரணங்களும் ஊழியர்களும் இல்லாததால் சிரமத்தை சந்தித்துள்ளோம்” எனக் கூறினர்.