#BREAKING விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு
Updated: Apr 19, 2026, 16:53 IST
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 13 பேர் உயிரிந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் கட்டுனார்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வனஜா என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தால், அப்பகுதியில் வானுயர புகை எழுந்தது. உடனே அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிந்தனர். 6 பேர் காயமடைந்தனர். 4 அறைகள் சேதமானதாகவும் கூறப்படுகிறது.