×

தேர்தல் தோல்வியால் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை மிளகனூர் அருகேவுள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிட்டு, மந்தையம்மாள் தம்பதியர். கிட்டு இராமநாதபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவர்களுக்கு ஷாலினி என்கிற மகளும், ஜெயசூர்யா என்கிற மகனும் உள்ளனர். மகள் ஷாலினி அருகில் உள்ள விருதுநகர் மாவட்டம், கட்டனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மகன் அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். ஷாலினி 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் ஷாலினி கணித பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண் பெற்று தோல்வியடைந்துள்ளார். இதில் மனமுடைந்த ஷாலினி வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து அவரது உடலை கைப்பற்றிய மானாமதுரை காவல்துறை தற்கொலை சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.