10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? ரிசல்ட் எப்போது?- வெளியானது அறிவிப்பு
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
10,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை இன்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். அதன்படி, இதில் 2026–2027-ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு 3.3. 2027 தொடங்கி 29.03.2027 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. செய்முறைத் தேர்வு 8.2. 2027 அன்று தொடங்கி 18.02.2027 வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 07.05.2027 அன்றும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் 20.05.2027 அன்றும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20-05-2027 அன்றும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 07-05-2027 அன்றும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு