×

108 அவசர ஊர்தி, 104 அமரர் ஊர்தி பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை!

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி கொரனோ இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 30,000 அளிக்கப்படும் என்றும் செவிலியர்களுக்கு ரூபாய் 20,000 இதர பணியாளர்களுக்கு 15,000 தரப்படும் என்றும் கூறினார். மேலும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள்,
 

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 12 ஆம் தேதி கொரனோ இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 30,000 அளிக்கப்படும் என்றும் செவிலியர்களுக்கு ரூபாய் 20,000 இதர பணியாளர்களுக்கு 15,000 தரப்படும் என்றும் கூறினார். மேலும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு ரூபாய் 20, 000 தரப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆய்வுக்கூட பணியாளர்கள், சிடி ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.