ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், 100 நாட்களுக்குள் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளைத் தமிழ்நாடு ஈட்டியுள்ளது. இதன் மூலம் 1.21 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்ப்பு சென்னையில், நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998… pic.twitter.com/xwVdFmvoFH
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 13, 2026
அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்ப்பு சென்னையில், நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து,2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து,777.74 கோடி ரூபாய் செலவிலான சிப்காட், டிட்கோ மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி ஆகிய நிறுவனங்களின் 2 திட்டங்கள் மற்றும் 13 புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து,9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.