×

ஆலமரத்தின் பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்!

ஆலமரத்தின் 102-வது பிறந்தநாளையொட்டி பொதுமக்கள் கேக்வெட்டி கொண்டாடிய சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை மீனாட்சிபுரம் கண்மாய் அருகே ஏழுக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு மரம் மட்டும் நூற்றாண்டை கடந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்துள்ளனர்.இதனால் நூற்றாண்டை கடந்த அந்த மரத்திற்கு மரியாதையும், அதற்கு செலுத்தும் நன்றிக் கடனாகவும் அதன் பிறந்தநாளை சமூக ஆர்வலர்கள் இணைந்து கொண்டாடினர். ஆலமரத்தின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது
 

ஆலமரத்தின் 102-வது பிறந்தநாளையொட்டி பொதுமக்கள் கேக்வெட்டி கொண்டாடிய சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை மீனாட்சிபுரம் கண்மாய் அருகே ஏழுக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு மரம் மட்டும் நூற்றாண்டை கடந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்துள்ளனர்.இதனால் நூற்றாண்டை கடந்த அந்த மரத்திற்கு மரியாதையும், அதற்கு செலுத்தும் நன்றிக் கடனாகவும் அதன் பிறந்தநாளை சமூக ஆர்வலர்கள் இணைந்து கொண்டாடினர்.

ஆலமரத்தின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து கேக் வெட்டி , இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நூற்றாண்டு காலமாக நிழல் தந்து , இயற்கைக்கு பரிசளித்து வரும் இந்த ஆலமரத்தை பாதுகாக்கும் பொருட்டு அதன் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாட்டு இன மரங்களை பாதுகாக்கும் வகையில் அப்பகுதி சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு சமூக ஆர்வலர்கள் ஆலமரக்கன்றுகளை பரிசாக வழங்கினர்.