×

1,023 கிலோ போதைப் பொருட்களை தீயிட்டு அழிப்பு

 

சென்னை மாநகரில் 197 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1022 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல் பாக்கத்தில் உள்ள ஜி.ஜே மல்டிகிளேவ் என்னும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனத்தில் கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது. சென்னை மாநகர பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1022 கிலோ கஞ்சாவை போலீசார் எரித்து அழித்தனர். சுமார் 197 வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1022 கிலோ கஞ்சாவை சென்னை மாநகர் தலைமையக கூடுதல் ஆணையாளர் விஜயேந்திர பிடாரி தலைமையில் எரித்து அழிக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட எரியூட்டியில், அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடி இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.