×

ஒவ்வொரு வீட்டிலும் 100 பறவைகள்; அந்த ஊரே ஒரு சரணாலயம்

சிதம்பரம் அடுத்த சீர்காழிக்கு அருகே இருக்கிறது பெரம்பூர் கிராமம். இந்த கிராமமே ஒரு பறவைகள் சரணாலயமாகிவிட்டது. அந்த அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் 100க்கும் மேற்பட்ட பறவைகள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. அதனாலேயே அக்கிராமத்தினர் இதுவரையிலும் தீபாவளி பண்டிகையினை கொண்டாடுவதில்லை. வவ்வால்களை தங்கள் கிராமத்தின் கடவுகளாகவே பாவித்து வருகிறார்கள் அம்மக்கள். பட்டாசு வெடித்தால் பறவைகள் பறந்துவிடும் என்பதால், பட்டாசு வெடிக்கக்கூடாது என்று அக்கிராமத்தினர் ஊர்க்கட்டுப்பாடு போட்டிருக்கிறார்கள். கிராமத்தினரும் பல
 

சிதம்பரம் அடுத்த சீர்காழிக்கு அருகே இருக்கிறது பெரம்பூர் கிராமம். இந்த கிராமமே ஒரு பறவைகள் சரணாலயமாகிவிட்டது. அந்த அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் 100க்கும் மேற்பட்ட பறவைகள் வசிக்கின்றன.

இக்கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. அதனாலேயே அக்கிராமத்தினர் இதுவரையிலும் தீபாவளி பண்டிகையினை கொண்டாடுவதில்லை.

வவ்வால்களை தங்கள் கிராமத்தின் கடவுகளாகவே பாவித்து வருகிறார்கள் அம்மக்கள். பட்டாசு வெடித்தால் பறவைகள் பறந்துவிடும் என்பதால், பட்டாசு வெடிக்கக்கூடாது என்று அக்கிராமத்தினர் ஊர்க்கட்டுப்பாடு போட்டிருக்கிறார்கள். கிராமத்தினரும் பல வருடங்களாக அந்தகடுப்பாட்டினை மீறாமல் இருந்து வருகிறார்கள்.

தீபாவளி திருநாளில் மட்டுமல்லாது சுப, அசுப நிகழ்ச்சிகளுக்கும் கூட அவர்கள் வெடி வெடிப்பதில்லை.

வவ்வால்கள் மட்டும் இருந்த இந்த ஊரில் சில ஆண்டுகளாகவே வெளிநாட்டுப்பறவைகளும் வருவதால் அரசு அங்கே சரணாலயம் அமைக்க வேண்டும் எதிர்பார்க்கிறார்கள் பெரம்பூர் கிராமத்தினர்.