×

100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை: தத்தளிக்கும் நீலகிரி!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை பெய்து வருவதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை பெய்து வருவதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் கடந்த நான்கு நாட்களாக ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் வேரோடு விழுந்தன. இதன் காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊட்டியில் கனமழை காரணமாகப்
 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த  100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை பெய்து வருவதால் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. 

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த  100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழை பெய்து வருவதால் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. 

நீலகிரியில் கடந்த நான்கு நாட்களாக  ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் வேரோடு விழுந்தன. இதன் காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊட்டியில் கனமழை காரணமாகப் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 

பந்தலூர் அருகே பொன்னானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின்  இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டு அவர்கள் வீட்டினுள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கனமழை தொடர்வதால் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுக்காவிற்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி அவலாஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  820 மி.மீ. பதிவாகியுள்ளது. மேலும் தமிழக வரலாற்றிலேயே 24 மணிநேரமும் ஈரப்பதமான நிகழ்வு உருவாகியது இதுதான் முதல்முறையாகும். மேலும்  ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.