×

இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்!

புதுக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகளவில் கஞ்சா கடத்தலும் பதுக்கலும் அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவள்ளூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோத செயலான கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் பலர் கைதாகியுள்ளனர். இந்த நிலையில், இலங்கைக்கு கடல் மார்க்கமாக
 

புதுக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகளவில் கஞ்சா கடத்தலும் பதுக்கலும் அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவள்ளூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோத செயலான கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் பலர் கைதாகியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கரையில் அதிகாரிகள் இருப்பதை கண்ட கடத்தல்காரர்கள், கஞ்சாவை படகிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர், அந்த படகுடன் கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.