நாளை முதல் 100 நாள் வேலை திட்ட ஊதிய உயர்வு அமல்
Mar 31, 2025, 19:46 IST
100 நாள் வேலை திட்டத்திற்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. 2025-26ம் நிதியாண்டுக்கான ஊதியம் ரூ.336 ஆக உயர்த்தபட்டது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 100 நாள் வேலை திட்ட ஊதிய உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 17 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், நாளை முதல் ரூ.319 ஆக இருந்த ஊதியம் நாளை முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதிகபட்சமாக ஹரியானாவில் ரூ.26 உயர்த்தப்பட்டு ரூ.400ஆக 100 நாள் திட்ட ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ரூ.7 உயர்த்தப்பட்டு 100 நாள் திட்ட ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.