×

10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா – செல்லாதா… பகீர் கிளப்பும் சுற்றறிக்கை… பீதியில் மக்கள்..

சமீபகாலமாக இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ரூபாய் நோட்டுகளும் சரி, நாணயங்களும் சரி செல்லாது என அவ்வப்போது வதந்தி பரவுவது வாடிக்கையாகி வருகிறது. திருப்பூர்: பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கச் சொல்லி, நடத்துநர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2 -ன் மண்டல மேலாளர் தனபால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ரூபாய் நோட்டுகளும் சரி, நாணயங்களும் சரி செல்லாது என அவ்வப்போது வதந்தி பரவுவது
 

சமீபகாலமாக இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ரூபாய் நோட்டுகளும்  சரி, நாணயங்களும் சரி செல்லாது என அவ்வப்போது வதந்தி பரவுவது வாடிக்கையாகி வருகிறது.

திருப்பூர்: பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கச் சொல்லி, நடத்துநர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2 -ன் மண்டல மேலாளர் தனபால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ரூபாய் நோட்டுகளும்  சரி, நாணயங்களும் சரி செல்லாது என அவ்வப்போது வதந்தி பரவுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி, திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை இரண்டாவது மண்டலத்தில், ‘பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை முடிந்தவரைத் தவிர்க்கவும். தவறும்பட்சத்தில், வழித்தடத்தில் பணிகளுக்கு வழங்கவும். வசூல் தொகை செலுத்தும்போது, 10 ரூபாய் நாணயத்தைத் தவிர்க்குமாறு அனைத்து நடத்துநர்களுக்கும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது’ என்று சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக மாறியது. 

இந்நிலையில்  10 ரூபாய் நாணயம் குறித்த  அந்த சுற்றறிக்கையைத் திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுக்கொண்டது. மேலும்  வங்கியில் பணம் செலுத்தும்போது ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவே அந்த சுற்றறிக்கை ஒட்டப்பட்டது.  மக்கள் அதை தவறாக புரிந்து கொண்டதால் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது என்று திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2 -ன் மண்டல மேலாளர் தனபால் தெரிவித்தார். 

இருப்பினும், அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோயம்புத்தூர் மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாமோ, தன்னிச்சையாகச் செயல்பட்டு, பொதுமக்களிடம் போக்குவரத்துக் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்ற வகையில் நடந்துகொண்டுள்ளார்.அதனால் சுற்றறிக்கையை வெளியிட்ட   தனபாலை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் .