×

10 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிச்சாலையாக்கப்பட்டது அண்ணா சாலை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா சாலையில் மீண்டும் இருவழிப்போக்குவரத்து கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை: பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா சாலையில் மீண்டும் இருவழிப்போக்குவரத்து கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் சென்னை அண்ணா சாலையில் தொடங்கியது. இதனால் எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக செல்லும் சாலை மூடப்பட்டது. இதனால் எ அந்த வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்கள், ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர் வழியாக சென்று கொண்டிருந்தது.
 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா சாலையில்  மீண்டும் இருவழிப்போக்குவரத்து கொண்டுவரப்பட்டுள்ளது. 

சென்னை: பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா சாலையில்  மீண்டும் இருவழிப்போக்குவரத்து கொண்டுவரப்பட்டுள்ளது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் சென்னை அண்ணா சாலையில் தொடங்கியது. இதனால்  எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக செல்லும் சாலை மூடப்பட்டது. இதனால் எ அந்த வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்கள், ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சத்யம் தியேட்டர் வழியாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொதுமக்கள்  நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில் தற்போது அண்ணா சாலையில் மெட்ரோ பணிகள் முடிந்து விட்டதால்  ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மீண்டும் அண்ணா சாலையில்  மீண்டும் இருவழிப்போக்குவரத்து கொண்டுவரப்பட்டுள்ளது.  10 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா சாலையில் மீண்டும்  இருவழி சாலை கொண்டு வரப்பட்டுள்ளதால்  பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.