×

"டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை" - தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

 

"டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று  தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. 

உலர் ஐஸ் கட்டிகள் மைனஸ் 78.5°C (-109.3°F) வெப்பநிலையில் உள்ள திட கார்பன் டை ஆக்ஸைடையே உலர் ஐஸ் கட்டி என அழைக்கப்படுகிறது. ஐஸ்கிரீம் அல்லது உயிரியல் மாதிரிகள் போன்ற குளிர்ச்சியாக அல்லது உறைந்த நிலையில் இருக்க வேண்டிய பொருட்களை பேக்கேஜ் செய்ய இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது . இதனை சாப்பிடுவது உயிருக்கே ஆபத்தாக போய்விடும். இது திட நிலை கார்பன் டை ஆக்ஸைடு என்பதால், இதை உட்கொள்வதால் உடல் உறுப்புகளுக்குள் கடுமையான காயங்கள் ஏற்படும். 

இந்நிலையில் குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.