×

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 10ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.அதேசமயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் மக்களுக்கு தொடர்ந்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 26,513 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21லட்சத்து 23ஆயிரத்து 029ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 420பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறையாமல் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.அதேசமயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் மக்களுக்கு தொடர்ந்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 26,513 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21லட்சத்து 23ஆயிரத்து 029ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 420பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,722ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,02,176ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10ஆவது நாளாக குறைந்த நிலையில் ஒரேமாதத்தில் கொரோனாவுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 39 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.