×

அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி..!

 

அரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவர் நாள் விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியது: ”காமராஜர் ஊழலற்ற ஆட்சியை கொடுத்தார். கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். நாட்டின் அனைத்து தலைவர்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்தார்.

கல்விக்காக அரசானது ஆண்டுக்கு ரூ.1,350 கோடியை ஒதுக்குகிறது. இதில் பள்ளிக் கல்விக்காக ரூ.950 கோடியை செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு படித்து வருகின்றனர். பிற படிப்புகளுக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும்.  

நல்ல நூல்களை படித்தால் நல்ல சிந்தனையாளராக வர முடியும். அதன்மூலம் மற்றவர்களுக்கு உதவ முடியும். எனவே பிள்ளைகள் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக படித்த வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.