தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை உயிரிழப்பு- கதறும் பெற்றோர்
கோபிசெட்டிபாளையம் அருகே தடுப்பூசி செலுத்திய 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்வாணியை சேர்ந்தவர் கார்த்திக் - சரோஜினி தம்பதி. இவர்களது 10 மாத ஆண் குழந்தைக்கு நேற்று காலை 9வது மாத தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அப்போது மேலும் ஒரு தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஒரே நாளில் குழந்தைக்கு 2 தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்தவுடன் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு இரவு தூங்கும்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், விடியற்காலை பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்ததாகவும் குழந்தையின் பெற்றோர் கூறுகின்றனர். கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துவந்தபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் ்்தெரிவித்துள்ளனர். குழந்தையிடன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 தடுப்பூசி செலுத்தப்பட்டதால் குழந்தை உயிரிழந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.