☰
×

அம்மாடியோவ்.. ஒரே மாதத்தில் மெட்ரோ ரயிலில் 1 கோடி பேர் பயணம் 

 

அக்டோபர் மாதத்தில் 1.08 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


மெட்ரோ ரயில்களில் அக்டோபரில் 1 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 408 பேர் பயணித்துள்ளனர். பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் 1 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்து 136 பேரும், வடபழனி - பூந்தமல்லி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 272 பேரும் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1,08,23,408 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 16.10.2026 அன்று 4,51,705 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் 10,240,136 பயணிகளும், 14.64 கி.மீ நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் சந்திப்பு வழியாக வடபழனி மெட்ரோ நிலையம் வரை செல்லும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் 5,83,272 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2026, அக்டோபர் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,05,718 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) (Single Journey Paper QR 22,52,397; ONDC - 13,95,128; Whatsapp - 4,74,602; Chennai One App - 4,26,780; Paytm 3,35,336; PhonePe - 1,76,364; Static QR 2,20,624; Online QR - 2,02,664; CMRL Mobile App (SVP) 1,33,795) செய்துள்ளனர்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
உள்ளே