☰
×

"10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு!" – ஏழுமலையான் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய வழிகாட்டுதல்கள்!

 

திரு​மலை​யில் உள்ள பத்​மாவதி விருந்​தினர் மாளிகை அரங்​கில் நேற்று நடை​பெற்ற அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டத்​தில் கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி கூறிய​தாவது:

திரு​மலை​யில் பிரம்​மோற்​சவத்​துக்கு அடுத்​தப்​படி​யாக வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் வழியே ஏழு​மலை​யானை தரிசிக்க பக்​தர்​கள் கூட்​டம் அலைமோதும். டிச.20 முதல் 29-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்​திருக்​கும்.இதில் சாமானிய பக்​தர்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகையில் ஏற்​பாடு​கள் செய்​யப்​படும்.

கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு 10 நாட்​களில் 7.83 லட்​சம் பக்​தர்​கள் மூல​வரை தரிசித்துள்​ளனர். அதே​போன்​று, இந்த ஆண்​டும் முதல் 3 நாட்​கள் ஆன்​லைனில் சர்வ தரிசன டோக்​கன்​கள் குலுக்​கல் முறை​யில் வழங்​கப்​படும்.

அடுத்த 7 நாட்​கள் வெறும் சர்வ தரிசனம் மட்​டுமே அனுமதிக்கப்படும். டிச.25-ம் தேதி வெள்​ளியன்று மூல​வருக்கு அபிஷேகம் நடைபெறும். அப்​போது கூட சர்வ தரிசனத்​தில் பக்தர்கள் அனுமதிக்​கப்​படு​வர்.

இவ்​வாறு வெங்​கைய்ய சவுத்ரி கூறி​னார்.