×

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்- தமிழக அரசு

தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அந்த வகையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியிருந்தன. ஆனால்
 

தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அந்த வகையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியிருந்தன. ஆனால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. முன்னதாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.