×

“வன்னியர்களுக்கு 10.5 % உள் இட ஒதுக்கீடு” சரண்டர் ஆன அதிமுக?

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டிற்கு ஆளும் அதிமுக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க , வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் பாமக தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டது. இதற்காக கடந்த சில மாதங்களாக அதிமுக அமைச்சர்கள், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசி வருகின்றனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதை தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி மீண்டும் சென்னையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில்
 

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டிற்கு ஆளும் அதிமுக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க , வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் பாமக தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டது. இதற்காக கடந்த சில மாதங்களாக அதிமுக அமைச்சர்கள், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசி வருகின்றனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதை தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி மீண்டும் சென்னையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதை தொடந்து நேற்று முதல்வர் பழனிசாமியை ராமதாஸ் சந்திக்க இருந்தார். இதனால் கூட்டணியில் முடிவு எட்டப்பட்டு விட்டதாக செய்திகள் கசிந்தன. இருப்பினும் கடைசி நேரத்தில் முதல்வர் பழனிசாமி- ராமதாஸ் சந்திப்பு ரத்தானது.

இந்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 % உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டவர்களுடன் பாமக குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.