×

வாட்ஸ் அப் செயலியில் பிழை இருக்கு! பேஸ்புக்கு அறிவுரை கூறிய மாணவன்!!

வாட்ஸ் ஆப்பில் இருந்த குறைப்பாட்டை கண்டுபிடித்துக் கூறிய 19 வயது கேரள மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத் தொகை வழங்கி உள்ளது. வாட்ஸ் ஆப்பில் இருந்த குறைப்பாட்டை கண்டுபிடித்துக் கூறிய 19 வயது கேரள மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத் தொகை வழங்கி உள்ளது. உலக அளவில் பிரபலமான வாட்ஸ் அப் செயலியை பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றன. வாட்ஸ் அப்பை, பேஸ் புக் விலைக்கு வாங்கிய பிறகு பல புதிய அப்டேஸ்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
 

வாட்ஸ் ஆப்பில் இருந்த குறைப்பாட்டை கண்டுபிடித்துக் கூறிய 19 வயது கேரள மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத் தொகை வழங்கி உள்ளது.

வாட்ஸ் ஆப்பில் இருந்த குறைப்பாட்டை கண்டுபிடித்துக் கூறிய 19 வயது கேரள மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத் தொகை வழங்கி உள்ளது.

உலக அளவில் பிரபலமான வாட்ஸ் அப் செயலியை பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றன. வாட்ஸ் அப்பை, பேஸ் புக் விலைக்கு வாங்கிய பிறகு பல புதிய அப்டேஸ்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மேலும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தங்களது செயலிகளில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் எனப்படும் `பக்’கைக் (Bug) கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து பேஸ்புக் கெளரவித்து வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியிலிருந்த பிழை ஒன்றை ஆலப்புழாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணா என்ற 19 வயது பி.டெக் மாணவர் கண்டறிந்து அதனை பேஸ்புக்கிற்கு தகவல் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பிழையை சரிசெய்வதற்கான ஐடியாவையும் பேஸ்புக் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். என்ன பிழையை அனந்த கிருஷ்ணா கண்டறிந்தார் என்பதை தெரிவிக்க பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் அந்த பிழையின் மூலம் பயனர்களின் தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் அழிக்க முடியும் என கூறப்படுகிறது. 

இத்தகைய மேஜரான பிழையை கண்டுப்பிடித்து கூறிய அனந்த கிருஷ்ணாவை பாராட்டி அவருக்கு வெகுமதி ரூ. 34 ஆயிரத்தை பேஸ்புக் வழங்கியுள்ளது. ஃபேஸ்புக்கின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் அனந்த கிருஷ்ணா பெயரும் சேர்க்கப்படும் என பேஸ்புக் உறுதியளித்துள்ளது. அனந்த் கிருஷ்ணா கேரள போலீஸின் ஆய்வுப் பிரிவான கேரளா போலீஸ் சைபர்ட்ரோம் (Kerala Police Cyberdome) பிரிவிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.