×

வந்துவிட்டது ஹுண்டாயின் முதல் எலெக்ட்ரிக் கார்! கோனா!

எலெக்ட்ரிக் கார்கள் உபயோகத்தை ஊக்கபடுத்தும் விதமாக மத்திய அரசும் இந்த பட்ஜெட்டில் மானிய உதவிகளை அள்ளித்தந்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்பிய ஹூண்டாய் நிறுவனம் அதன் கோனா மாடல் எஸ்.யூ.வி. கார்களை இந்தியாவில் இறக்கி உள்ளது. கார் வாங்குறதுகூட பெரிய பிரச்னை இல்ல, இந்த பெட்ரோல் போட்டுத்தான் சமாளிக்க முடியுமான்னு தெரியலை என்ற அங்கலாய்ப்பு அதிகம் கேட்பதில் ஆச்சர்யம் இல்லை. எனவேதான், எலெக்ட்ரிக் கார்கள் உபயோகத்தை ஊக்கபடுத்தும் விதமாக மத்திய அரசும் இந்த பட்ஜெட்டில் மானிய
 

எலெக்ட்ரிக் கார்கள் உபயோகத்தை ஊக்கபடுத்தும் விதமாக மத்திய அரசும் இந்த பட்ஜெட்டில் மானிய உதவிகளை அள்ளித்தந்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்பிய ஹூண்டாய் நிறுவனம் அதன் கோனா மாடல் எஸ்.யூ.வி. கார்களை இந்தியாவில் இறக்கி உள்ளது.

கார் வாங்குறதுகூட பெரிய பிரச்னை இல்ல, இந்த பெட்ரோல் போட்டுத்தான் சமாளிக்க முடியுமான்னு தெரியலை என்ற அங்கலாய்ப்பு அதிகம் கேட்பதில் ஆச்சர்யம் இல்லை. எனவேதான், எலெக்ட்ரிக் கார்கள் உபயோகத்தை ஊக்கபடுத்தும் விதமாக மத்திய அரசும் இந்த பட்ஜெட்டில் மானிய உதவிகளை அள்ளித்தந்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்பிய ஹூண்டாய் நிறுவனம் அதன் கோனா மாடல் எஸ்.யூ.வி. கார்களை இந்தியாவில் இறக்கி உள்ளது. இதுவே இந்தியாவில் ஹூண்டாய் அறிமுகம் செய்யும் முதல் முழுமையான எலக்ட்ரிக் காராகும். இவை CKD (completely-knocked-down) முறையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

முகப்பில் உள்ள கிரில் அமைப்பு மூடப்பட்டதாகவும், எக்ஸாஸ்ட் பைப்புகள் இல்லாததுமே இதர கார்களில் இருந்து Hyundai Konaவினை மாறுபடுத்தி காட்டுகின்றன. இருப்பினும் கச்சிதமான டிசைனில் Kona வடிவமைக்கப்பட்டுள்ளது. Led Headlights, Led Tail Lights, Plastic Body Cladding, roof rails, 17-inch alloy wheels ஆகியவை வெளிப்புற சிறப்பம்சங்களாகும். காரின் சார்ஜிங் பாயிண்ட் முகப்பில் இடம்பெற்றுள்ளது.

Kona Electric காரில்  permanent magnet synchronous motor கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 136hp பவரையும், 395 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லதற்கு ஒப்பானதாகும்.  39.2kWh லித்தியம் அயன் பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது சிங்கில் சார்ஜில் 452 கிமி செல்லும் திறன் பெற்றிருப்பதாக ARAI நிறுவனம் சான்றளித்துள்ளது. இந்த லித்தியம் அயன் பேட்டரியை 50kW DC fast charger வாயிலாக 57 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏற்றிவிடலாம். அதே நேரத்தில் AC மூலம் ஏற்றினால் முழு சார்ஜை எட்ட 6 மணி நேரம், 10 நிமிடம் ஆகலாம்.

இதில் Eco, Comfort மற்றும் Sport என 3 வித டிரைவிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காருடன் home charger ஒன்றினை ஹூண்டாய் நிறுவனம் அளிக்கிறது. டீலர்ஷிப்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஹுண்டாய் முடிவெடுத்துள்ளது. அதே போல இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Hyundai Kona எஸ்யூவி காருக்கு 3 வருட வரம்பில்லா வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு 8 வருட/1.6 லட்சம் கிமி வாரண்டி கொடுக்கப்படுகிறது. வெள்ளை, சில்வர், நீலம் மற்றும் கருப்பு என 4 வண்ணங்களில் இந்தக் கார் கிடைக்கிறது. வெள்ளை பாடி கலரில் கருப்பு வண்ணத்தில் ரூஃப்பிங் செய்யப்பட்ட ஒரு டூயல் டோன் மாடலும் கிடைக்கிறது. (ரூ. 20,000 கூடுதல் விலையில்).