×

மைக்ரோசாப்ட் இயக்குநர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் விலகல்

மைக்ரோசாப்ட் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் விலகியுள்ளார். கலிபோர்னியா: மைக்ரோசாப்ட் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் விலகியுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கடந்த 1975-ஆம் ஆண்டு பால் ஆலனுடன் இணைந்து பில்கேட்ஸ் தொடங்கினார். கடந்த 2000-ஆம் ஆண்டு வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பில்கேட்ஸ் பதவி வகித்து வந்தார். ஆனால் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் அவர் மைக்ரோசாப்ட் நிறுவன அலுவலகத்திற்கு தினமும் செல்வதை செல்வதை குறைத்துக் கொண்டார். பில்
 

மைக்ரோசாப்ட் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் விலகியுள்ளார்.

கலிபோர்னியா: மைக்ரோசாப்ட் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் விலகியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கடந்த 1975-ஆம் ஆண்டு பால் ஆலனுடன் இணைந்து பில்கேட்ஸ் தொடங்கினார். கடந்த 2000-ஆம் ஆண்டு வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பில்கேட்ஸ் பதவி வகித்து வந்தார். ஆனால் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் அவர் மைக்ரோசாப்ட் நிறுவன அலுவலகத்திற்கு தினமும் செல்வதை செல்வதை குறைத்துக் கொண்டார். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிர்வகிப்பதில் பில்கேட்ஸ் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு உறுப்பினர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மக்கள் சேவையில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதால் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். மேலும் மைக்கரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா மற்றும் நிர்வாகிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக பில்கேட்ஸ் தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது.