×

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக் நிறுவனம் – இந்த முறை என்ன பிரச்சனை? முழு தகவல்கள் உள்ளே

ஃபேஸ்புக் நிறுவனம் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளது. கலிபோர்னியா: ஃபேஸ்புக் நிறுவனம் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளது. ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்ட புது பிழையின்படி சுமார் 70 லட்சம் பயனரின் புகைப்படங்களை ஆப் டெவலப்பர்களுக்கு அம்பலப்படுத்தியதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இம்முறை கண்டறியப்பட்ட பிழை காரணமாக பயனரின் புகைப்படங்களை மற்றவர்கள் பார்க்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக் தளத்தில் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சனைகள் அரங்கேறுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு புகைப்படங்களை இயக்க அனுமதியளித்த
 

ஃபேஸ்புக் நிறுவனம் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளது.

கலிபோர்னியா: ஃபேஸ்புக் நிறுவனம் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளது.

ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்ட புது பிழையின்படி சுமார் 70 லட்சம் பயனரின் புகைப்படங்களை ஆப் டெவலப்பர்களுக்கு அம்பலப்படுத்தியதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இம்முறை கண்டறியப்பட்ட பிழை காரணமாக பயனரின் புகைப்படங்களை மற்றவர்கள் பார்க்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக் தளத்தில் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சனைகள் அரங்கேறுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு புகைப்படங்களை இயக்க அனுமதியளித்த சுமார் 68 லட்சம் பயனர்களின் புகைப்படங்கள் பிழையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு இந்த புகைப்படங்கள் அம்பலமாகி இருந்தது. ஆனால், இந்த பிழை சரி செய்யப்பட்டு விட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.