×

பிரபல அலெக்ஸா சாதனத்திடம் இந்தியர்கள் கேட்ட குறும்பு கேள்விகள் வெளியானது

அமேசான் நிறுவனத்தின் வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் இயங்கும் அலெக்ஸா சாதனத்திடம் இந்தியர்கள் கேட்ட கேள்விகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி: அமேசான் நிறுவனத்தின் வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் இயங்கும் அலெக்ஸா சாதனத்திடம் இந்தியர்கள் கேட்ட கேள்விகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் நிறுவனம் உருவாக்கிய வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பர்சனல் அசிஸ்டென்ட் சாதனமான அலெக்ஸா, கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது அமேசான் எக்கோ, ஃபயர் ஓ.எஸ், ஐ.ஓ.எஸ், ஆண்ட்ராய்டு, லினக்ஸ், கோர்டானா உள்ளிட்ட
 

அமேசான் நிறுவனத்தின் வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் இயங்கும் அலெக்ஸா சாதனத்திடம் இந்தியர்கள் கேட்ட கேள்விகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: அமேசான் நிறுவனத்தின் வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் இயங்கும் அலெக்ஸா சாதனத்திடம் இந்தியர்கள் கேட்ட கேள்விகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் நிறுவனம் உருவாக்கிய வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பர்சனல் அசிஸ்டென்ட் சாதனமான அலெக்ஸா, கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது அமேசான் எக்கோ, ஃபயர் ஓ.எஸ், ஐ.ஓ.எஸ், ஆண்ட்ராய்டு, லினக்ஸ், கோர்டானா உள்ளிட்ட தளங்களில் இயங்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்திடம் கடந்தாண்டு இந்தியர்கள் கேட்ட கேள்விகளின் பட்டியல் குறித்து வெளியாகியுள்ளது. அதன்படி சராசரியாக நிமிடத்துக்கு 8 முறை இந்தியர்கள் “எவ்வாறு இருக்கிறாய்என ஆங்கிலத்தில் நலம் விசாரிக்கின்றனர். அதேபோல ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு இந்தியர் அலெக்ஸா சாதனத்திடம் “நான் உன்னை காதலிக்கிறேன்என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.

இரண்டு நிமிடங்களுக்கு  ஒருமுறை “அலெக்ஸா, என்னை கல்யாணம் செய்து கொள்வாயா?” என்று கேட்கின்றனர். மேலும் சராசரியாக நிமிடத்திற்கு ஆயிரம் பேர் பாடல்களை இசைக்குமாறு கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அலெக்ஸா சாதனத்திடம் தொழில்நுட்பத்தை பற்றியும் இந்தியர்கள் அதிகமாக கேள்வி கேட்டுள்ளனர். ஒரு வாரத்தில் லட்சக்கணக்கான முறை இந்தியர்கள் அலெக்ஸாவுடன் பேசுவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பர்சனல் அசிஸ்டென்ட்டை இந்தியர்கள் அதிகம் விரும்புவதும், பயன்படுத்துவதும் உறுதி ஆகியுள்ளது.