×

பட்ஜெட் விலையில் ஜியோமி ரெட்மி Y3; சிறப்பம்சங்கள் என்ன?முழு விவரம்!

இது செல்ஃபி காலம் என்பதால் செல்ஃபிக்கென முக்கியத்துவம் ரெட்மி Y சீரிஸில் போன்களை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்தது ஜியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமான ஜியோமி, அண்மையில் வெளியிட்ட ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், மிகக்குறுகிய காலத்தில் 4 மில்லியன் அளவில் விற்று தீர்ந்தது. இந்த நிலையில், ரெட்மி Y3 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஜியோமி நிறுவனம். இந்திய சந்தைக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த செல்போன்கள் வருகிற 30-ம்
 

இது செல்ஃபி காலம் என்பதால் செல்ஃபிக்கென முக்கியத்துவம் ரெட்மி Y சீரிஸில் போன்களை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்தது ஜியோமி நிறுவனம்

ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமான ஜியோமி, அண்மையில் வெளியிட்ட ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், மிகக்குறுகிய காலத்தில் 4 மில்லியன் அளவில் விற்று தீர்ந்தது.

இந்த நிலையில், ரெட்மி Y3 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஜியோமி நிறுவனம். இந்திய சந்தைக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த செல்போன்கள் வருகிற 30-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இது செல்ஃபி காலம் என்பதால் செல்ஃபிக்கென முக்கியத்துவம் ரெட்மி Y சீரிஸில் போன்களை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்தது ஜியோமி நிறுவனம்.

அந்த வகையில் செல்ஃபி-க்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ரெட்மி Y3 ஸ்மார்ட்போனில் 32 MP செல்ஃபி கேமரா பல்வேறு வசதிகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.26 இன்ச் அளவு கொண்ட HD + IPS LCD 720*1520 பிக்ஸல், டாட் நாட்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக Corning Gorilla Glass 5 தரப்பட்டுள்ளது.

Adreno 506 GPU உடன் குவால்காம் ஸ்நாப்டிராகன் 632 octa-core புராசஸர், பின்பக்கத்தில் கிளாஸி வடிவமைப்பைக் கொடுக்கும் கண்ணாடி போன்ற தோற்றமளிக்கும் வடிவமைப்பு, 4000 mAh பேட்டரி, 10W திறன் கொண்ட சார்ஜர் உள்ளிட்டவைகளும் ரெட்மி Y3-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள 12 MP + 2 MP பின்பக்க இரட்டை கேமிரா மூலம் குறைந்த வெளிச்சத்தில் படமெடுக்கும் வசதி,  Beautify 4.0, Face recognition, போர்ட்ரைட் மோட், பனோரமா மோட் மற்றும் HDR வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. Prime Black, Elegant Blue மற்றும் Bold Red ஆகிய மூன்று கலர்களில் இந்த ஸ்மார்ட்போன்கள், MIUI 10 உடன் Android 9.0 Pie இயங்குதளத்தில் இயங்கும்.

P2i என்ற தொழில்நுட்பம் தண்ணீரில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பை குறைக்குமே தவிர, இதனை முழுமையான water proof என்று எடுத்துக் கொள்ள முடியாது. Face Unlock வசதியும் பின்பக்கத்தில் finger print sensor வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

3GB Ram + 32GB மெமரி வேரியன்ட் கொண்ட ரெட்மி Y3 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999 எனவும், 4GB RAM + 64GB மெமரி வேரியன்ட் கொண்ட ரெட்மி Y3 ஸ்மார்ட்போன் விலை ரூ.11,999 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை – முழு விபரம் உள்ளே?!..