கே.டி.எம் நிறுவனம் புதிய வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!
இந்தியாவில் புதிய வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போன் மாடலை கே.டி.எம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் புதிய வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போன் மாடலை கே.டி.எம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பிரபல கே.டி.எம் (KDM) ஆடியோ உபகரணங்கள் நிறுவனம் புதிய வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது கே.டி.எம் 851ஹெச் என்ற மாடல் ஆகும். ஓவர்ஹெட் டைப் ஹெட்போனான இந்த சாதனத்தை அனைத்து வயதினரும் எளிதாக பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.1499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பேட்டரி பேக்கப் 7 முதல் 8 மணிநேரம் வரை தாங்கும். மேலும் வாய்ஸ்கால் மேற்கொள்ள மைக்கும் இந்த ஹெட்போன் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கேமிங், வீடியோ சாட், மியூசிக் மற்றும் வாய்ஸ்காலிங் ஆகிய வசதிகளை இதன் மூலம் பயன்படுத்த முடியும். கே.டி.எம் 851ஹெச் ஹெட்போனில் மெமரி கார்டு ஸ்லாட், ஹெச்.டி ஆடியோ, ப்ளூடூத் 4.2, நாய்ஸ் கேன்சல், 500 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு மணி நேரத்தில் இந்த சாதனம் முழுமையாக சார்ஜ் ஆகும். கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கிறது. ஒரு வருட வாரண்டியுடன் ஆக்ஸ் கேபிள் சப்போர்ட்டும் இதில் அளிக்கப்படுகிறது.