×

காதல் ஜோடிகளை சிக்கவைக்க வாட்ஸ்அப் திட்டமா? புதிய அப்டேட் இதுதான்!

வாட்சப் நிறுவனம் ஐபோன்களின் செயலியில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட இருக்கிறது. இது நெட்டிசன்களால் சமுக வலைதளங்களில் காதல் ஜோடிகளை வைத்து கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. வாட்சப் நிறுவனம் ஐபோன்களின் செயலியில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட இருக்கிறது. இது நெட்டிசன்களால் சமுக வலைதளங்களில் காதல் ஜோடிகளை வைத்து கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. வாட்சப் செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என புகார்கள் எழுப்பப்பட்டன. அதனை ஒரே அப்டேட் மூலம் அந்நிறுவனம்
 

வாட்சப் நிறுவனம் ஐபோன்களின் செயலியில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட இருக்கிறது. இது நெட்டிசன்களால் சமுக வலைதளங்களில் காதல் ஜோடிகளை வைத்து கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

வாட்சப் நிறுவனம் ஐபோன்களின் செயலியில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட இருக்கிறது. இது நெட்டிசன்களால் சமுக வலைதளங்களில் காதல் ஜோடிகளை வைத்து கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

வாட்சப் செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என புகார்கள் எழுப்பப்பட்டன. அதனை ஒரே அப்டேட் மூலம் அந்நிறுவனம் சரி செய்தது. பின்னர் மற்றொரு அப்டேட் மூலம் வாட்சப் செயலிக்குள் செல்ல கைரேகை பாதுகாப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு புதிய வசதியை கொண்டுவந்தது.

கடந்த ஆண்டில் இருந்தே, வாட்சப் செயலி மூலம் இனி பணபரிவர்தனை செய்துகொள்ளும் வசதிக்கு வேலைப்பாடுகள் நடந்துவருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியாவில் வாட்சப் செயலி உரிய பாதுகாப்பு வசதியுடன் இல்லை எனக்கூறி, பணபரிவர்தனைக்கு எதிர்ப்புகள் குவிந்தன. இந்நிலையில், இந்த வசதியை இந்தியாவில் கொண்டுவர அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

தற்போது, ஐபோன் பயன்பட்டாளர்களுக்கு என்றே அதன் ஆப் ஸ்டோரில் வாட்சப் நிறுவனம் அப்டேட் ஒன்றை வழங்குகிறது. அதில் கால் வெயிட்டிங் வசதி கொண்டுவரப்பட இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மற்றொருவருடன் பேசிக்கொண்டு இருந்தால், கால் செய்ய முயற்சிப்பவர்களுக்கு கால் வெயிட்டிங் என தொடுதிரை இனி காட்டி விடுமாம்.

மேலும் இந்த புதிய ஐ.ஒ.எஸ். அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் புதிய சாட் ஸ்கிரீன், கண் பார்வையற்றோர் பயன்படுத்தும் எழுத்துமுறையான பிரெய்லி கீபோர்டு வசதியையும் வழங்கி இருக்கிறது. 

இந்த புதிய அப்டேட் காதல் ஜோடிகளை பிரிக்கவே வருகிறதோ? என நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் கிண்டலடித்து வருவது, நகைப்பூட்டுகிறது.