×

எந்த சொகுசு காரையும் திறக்கக் கூடிய சாதனத்தை உருவாக்கிய ஹேக்கர்!

எந்த சொகுசுக் காரையும் திறக்கக் கூடிய சாதனத்தை ஹேக்கர் ஒருவர் உருவாக்கி உள்ளார். லண்டன்: எந்த சொகுசுக் காரையும் திறக்கக் கூடிய சாதனத்தை ஹேக்கர் ஒருவர் உருவாக்கி உள்ளார். ‘இவான் கனெக்ட்’ என்ற ஹேக்கர் ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளார். இந்த சாதனமானது வயர்லெஸ் கீ ஃபோப் அமைப்பை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எந்த சொகுசு காரிலும் நுழைவதற்கு உதவுகிறது. அவரது சாதனத்திற்கு 9000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,43,700) என்று அவர் விலை நிர்ணயித்துள்ளார். மேலும்
 

எந்த சொகுசுக் காரையும் திறக்கக் கூடிய சாதனத்தை ஹேக்கர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.

லண்டன்: எந்த சொகுசுக் காரையும் திறக்கக் கூடிய சாதனத்தை ஹேக்கர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.

‘இவான் கனெக்ட்’ என்ற ஹேக்கர் ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளார். இந்த சாதனமானது வயர்லெஸ் கீ ஃபோப் அமைப்பை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எந்த சொகுசு காரிலும் நுழைவதற்கு உதவுகிறது. அவரது சாதனத்திற்கு 9000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,43,700) என்று அவர் விலை நிர்ணயித்துள்ளார். மேலும் ‘கீலெஸ் ரிப்பீட்டர்’ என்று அதற்கு பெயரிட்டுள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில் இந்த சாதனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நிரூபித்தார். மூடப்பட்ட ஒரு காரின் டிரைவர் பக்க கதவை அந்த சாதனத்தின் உதவியுடன் திறந்த அவர், அத்துடன் காரின் என்ஜினையும் ஸ்டார்ட் செய்தார்.

ஆனால், 22 முதல் 40 கிலோஹெர்ட்ஸ் வரை அதிர்வெண்களை கொண்டு இயங்கும் கார்களை தவிர மற்ற அனைத்து சொகுசுக் கார்களிலும் தன்னுடைய சாதனம் வேலை செய்யும் என்று அந்த ஹேக்கர் தெரிவித்துள்ளார். அதாவது 2014-ஆம் ஆண்டுக்கு அடுத்து வெளியான மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, போர்ஷே, பென்ட்லி, ரோல்ஸ்ராய்ஸ் மாடல் கார்களில் இந்த சாதனம் வேலை செய்யாது. அதேபோல இந்த சாதனம் அனைத்து நேரத்திலும் சரியாக இயங்கும் என்று எந்த உத்தரவாதமும் தன்னால் தர முடியாது என்று கூறியுள்ளார்.