×

உலகின் 2-வது பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டாக இந்தியா முன்னேற்றம்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டாக இந்தியா முன்னேறியுள்ளது. டெல்லி: உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டாக இந்தியா முன்னேறியுள்ளது. சமீபத்தில் கவுண்டர்பாய்ண்ட் இணையதளம் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டாக இந்தியா முன்னேறியுள்ளது. கடந்தாண்டு சுமார் 158 மில்லியன் எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 28 சதவீதம் சியோமி நிறுவன
 

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டாக இந்தியா முன்னேறியுள்ளது.

டெல்லி: உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டாக இந்தியா முன்னேறியுள்ளது.

சமீபத்தில் கவுண்டர்பாய்ண்ட் இணையதளம் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டாக இந்தியா முன்னேறியுள்ளது. கடந்தாண்டு சுமார் 158 மில்லியன் எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 28 சதவீதம் சியோமி நிறுவன சாதனங்களாகும். அடுத்த இடத்தில் சாம்சங் நிறுவனம் 21 சதவீதத்துடன் உள்ளது. 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் இது மூன்று சதவீதம் குறைவாகும். விவோ மற்றும் ரியல்மி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை காட்டியுள்ளன.

2018-ஆம் ஆண்டு விவோ நிறுவனம் 10 சதவீதமாகவும், ரியல்மி நிறுவனம் 3 சதவீதமாகவும் இருந்தன. ஆனால் தற்போது முறையே 16 சதவீதம் மற்றும் 10 சதவீதத்திற்கு முன்னேறியுள்ளன. அதிலும் ரியல்மி பிராண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. ஓப்போ நிறுவனம் ஒரு சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்தாண்டு அந்நிறுவனம் 9 சதவீத சந்தையை பிடித்துள்ளது. சந்தையில் மற்ற ஸ்மார்ட்போன்களின் விற்பனை 16 சதவீதமாக குறைந்துள்ளது. 2018-ஆம் ஆண்டு இது 27 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.