×

இந்தியாவில் சுமார் 50 கோடி ஸ்மார்ட்போன் பயனர்கள்; 77 சதவீதம் பேர் ஆன்லைனில் இருக்கிறார்கள் – ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

இந்தியாவில் சுமார் 50 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லி: இந்தியாவில் சுமார் 50 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய மக்கள் தொகை சுமார் 138 கோடியை தாண்டி விட்டது. இதில் சுமார் சுமார் 50 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களில் சுமார் 77 சதவீதம் பேர் வயர்லெஸ் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். அதாவது மொபைல் டேட்டா அல்லது வைஃபை மூலம் ஆன்லைனில் இருக்கிறார்கள்.
 

இந்தியாவில் சுமார் 50 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் சுமார் 50 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய மக்கள் தொகை சுமார் 138 கோடியை தாண்டி விட்டது. இதில் சுமார் சுமார் 50 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களில் சுமார் 77 சதவீதம் பேர் வயர்லெஸ் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். அதாவது மொபைல் டேட்டா அல்லது வைஃபை மூலம் ஆன்லைனில் இருக்கிறார்கள். கடந்தாண்டு வரை இந்தியாவில் மொத்தம் 502 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் இருக்கிறார்கள். 2018-ஆம் ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கையானது 15 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. சியோமி மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து புதிய பயனர்களை ஈர்த்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவில் ரூ.5000 முதலே நல்ல ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைப்பதால் ஏழை, எளிய மக்களும் ஸ்மார்ட்போன் கலாசாரத்திற்கு மாறி வருகின்றனர். அதனால் ரூ.5000 முதல் ரூ.10,000 விலை கொண்ட பேசிக் செக்மன்ட் ஸ்மார்ட்போன் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் இந்தியாவில் ரியல்மி, விவோ, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் கடந்தாண்டு அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ரியல்மி 49 சதவீதமும், விவோ 44 சதவீதமும், ஒன்பிளஸ் 41 சதவீதமும், சாம்சங் 9 சதவீதமும், சியோமி 25 சதவீதமும், ஓப்போ 36 சதவீதமும் கடந்தாண்டு வளர்ச்சி பெற்றுள்ளன.