×

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கை – காரணம் என்ன?

பழைய வெர்ஷன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி: பழைய வெர்ஷன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீங்கள் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்தவில்லையா…அப்படியானால் உங்களது தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. பழைய வெர்ஷன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது ஹேக்கர்கள் தங்கள் அருகில் உள்ள அத்தகைய ஸ்மார்ட்போன்களுக்கு அமைதியாக வைரஸ் அனுப்பி தகவல்களை களவாட வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆண்ட்ராய்டு
 

பழைய வெர்ஷன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி: பழைய வெர்ஷன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீங்கள் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்தவில்லையா…அப்படியானால் உங்களது தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. பழைய வெர்ஷன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது ஹேக்கர்கள் தங்கள் அருகில் உள்ள அத்தகைய ஸ்மார்ட்போன்களுக்கு அமைதியாக வைரஸ் அனுப்பி தகவல்களை களவாட வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு கூட இந்த அச்சுறுத்தல் பொருந்தும்.

இதை நிகழ்த்த ஹேக்கர்களுக்கு ப்ளூடூத் முகவரி தெரிந்திருந்தாலே போதுமானது. ஆனால் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்கள் கவலை கொள்ள தேவையில்லை. ஹேக்கர்களின் இத்தகைய திருட்டை தடுக்க லேட்டஸ்ட் செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்டை பயனர்கள் இன்ஸ்டால் செய்தாலே போதுமானது. அவ்வாறு அப்டேட் கிடைக்காதவர்கள் தேவையான சமயங்களில் மட்டும் ப்ளூடூத்தை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும். மற்ற நேரங்களில் அதை நிறுத்தி விட வேண்டும்.