×

அபாரமான அம்சங்களுடன் மலிவு விலையில் விவோ Y91i ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனம், y சீரியஸின் கீழ் பட்ஜெட் விலையிலான விவோ Y91i என்ற ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது விவோ ஓய் 91, விவோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அன்மையில் அறிமுகம் செய்து பெரும் வரவேற்பை பெற்ற விவோ நிறுவனம், y சீரியஸின் கீழ் பட்ஜெட் விலையிலான விவோ Y91i என்ற ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 4030mAh பேட்டரி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த இரண்டு பின்பக்க கேமிராக்கள், 6.22-இன்ச் waterdrop notch style டிஸ்ப்ளே உள்ளிட்ட சிறப்பம்சங்கள்
 

விவோ நிறுவனம், y சீரியஸின் கீழ் பட்ஜெட் விலையிலான விவோ Y91i என்ற ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

விவோ ஓய் 91, விவோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அன்மையில் அறிமுகம் செய்து பெரும் வரவேற்பை பெற்ற விவோ நிறுவனம், y சீரியஸின் கீழ் பட்ஜெட் விலையிலான விவோ Y91i என்ற ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

4030mAh பேட்டரி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த இரண்டு பின்பக்க கேமிராக்கள், 6.22-இன்ச் waterdrop notch style டிஸ்ப்ளே உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் விலை தான். 2GB ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு கொண்ட விவோ Y91i விலை இந்தியாவில் ரூ.7,990 எனவும், 2GB ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூ.8,490 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் எந்த ஒரு நிகழ்வை நடத்தவில்லை. ஆனால், மும்பையை சேர்ந்த சார்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் இதன் விலை உள்ளிட்ட தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, நாட்டின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் விவோ Y91i கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் விற்பனை குறித்த தகவல்கள் இல்லை.

விவோ Y91i சிறப்பம்சங்கள்:

விவோ Y91i ஸ்மார்ட்போன் மாடல் 6.22 எச்டி பிளஸ் (1520×720 pixels) 19:9 2.5D வளைந்த டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 163.5 எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், குவால்காம் ஸ்நாப்டிராகன் ஆக்டோ-கோர் மீடியா டெக் ஹெலியோ P22 12nm பிராஸசர், 2 ஜிபி ரேம் உடன் 16ஜிபி/32ஜிபி சேமிப்பு வசதி கொண்டது. Android 8.1 (Oreo) இயங்குதளம், மற்றும் 256ஜிபி நீட்டிக்கக் கூடிய சேமிப்பு வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

மேலும், எல்.இ.டி பிளாஷ் உடன் கூடிய 13 மெகாபிக்ஸல் பின்பக்க கேமிரா, 8 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமிரா, 4,030mAh பேட்டரி, வை-பை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, GPS, 4G VoLTE  சிம்கார்டு உள்ளிட்ட வசதிகளையும் இந்த மாடல் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.