×

கூகுளுக்கு போட்டியாக மெயில் சேவை அளிக்க ஜூம் முடிவு!

2020 ஆம் ஆண்டில் கொரோனா தாக்கத்தின் காரணமாக பலசேவைகள் மின்னணு முறைக்கு மாறின. அப்படி மாறியவற்றில் முக்கியமானது அலுவலக மீட்டிங்குகள். பணியாளர்கள் வீடுகளில் இருந்தே வேலைபார்க்கலாம் என அறிவித்தபோது, அவர்களை அடிக்கடி தொடர்பு கொள்வதற்கு பல நிறுவனங்களும் பலவிதமாக செயலிகளை பயன்படுத்தின. அப்படி அதிகம்பேர் பயன்படுத்திய செயலி ஜூம். அலுவலக மீட்டிங் தவிர, உற்வினர்களிடையே சந்திப்பு போன்ற தேவைகளுக்கு ஜூம் செயலியை பலரும் தரவிறக்கினர். அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பெயராக ஜூம் மாறியது. இந்த நிலையில், ஜூம்
 

2020 ஆம் ஆண்டில் கொரோனா தாக்கத்தின் காரணமாக பலசேவைகள் மின்னணு முறைக்கு மாறின. அப்படி மாறியவற்றில் முக்கியமானது அலுவலக மீட்டிங்குகள். பணியாளர்கள் வீடுகளில் இருந்தே வேலைபார்க்கலாம் என அறிவித்தபோது, அவர்களை அடிக்கடி தொடர்பு கொள்வதற்கு பல நிறுவனங்களும் பலவிதமாக செயலிகளை பயன்படுத்தின. அப்படி அதிகம்பேர் பயன்படுத்திய செயலி ஜூம்.

அலுவலக மீட்டிங் தவிர, உற்வினர்களிடையே சந்திப்பு போன்ற தேவைகளுக்கு ஜூம் செயலியை பலரும் தரவிறக்கினர். அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பெயராக ஜூம் மாறியது.

இந்த நிலையில், ஜூம் செயலி வரும் ஆண்டில் இருந்து மெயில் சேவைகளை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மெயில் சேவைகளில் ஜிமெயில் நிறுவனத்தின் சேவைகளை உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஜூம் மெயில் சேவை மூலம் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டி உருவாக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர ஜூம் காலண்டர் செயலியையும் அறிமுகம் செய்ய உள்ளது. வரும் ஆண்டு தொடக்கத்தில் இதற்கான சோதனைகள் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தின் வீடியோ செயலிக்கு மிகப் பெரிய போட்டியாக ஜூம் அமைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஜூம் நிறுவனத்தின் வளர்ச்சி 2020 ஆண்டில் அபரிமிதமாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, புதிய சேவைகளுடன் ஜூம் இறங்க உள்ளது.

ஜூம் நிறுவனத்தின் மெயில் மற்றும் காலாண்டர் சேவைகள் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதிக்கு பிறகு செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. ஜூம் செயலியும் அமெரிக்காவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.