×

“எங்க நாட்டு சட்டத்த விட நீங்க பெரியவர்கள் அல்ல” – ட்விட்டருக்கு குட்டு வைத்த நாடாளுமன்ற நிலைக்குழு!

சமூக வலைதள நிறுவனங்கள் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர வேண்டும். அரசு சொன்னால் அந்தப் பதிவை நீக்க வேண்டும் உள்ளிட்ட புதிய ஐடி விதிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
 

சமூக வலைதள நிறுவனங்கள் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர வேண்டும். அரசு சொன்னால் அந்தப் பதிவை நீக்க வேண்டும் உள்ளிட்ட புதிய ஐடி விதிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ட்விட்டரை தவிர மற்ற சமூக வலைதள நிறுவனங்களும் அரசின் விதிகளுக்கு இணங்கின.
ஆனால் ட்விட்டர் மட்டும் அரசுக்கு தண்ணி காட்டி வந்தது. மாறாக புதிய விதிகள் இந்தியர்களின் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டியது. இது மத்திய அரசைக் கோபத்துக்குள்ளாக்கியது. வெங்கையா நாயுடுவின் ஃப்ளு டிக்கை ட்விட்டர் நீக்க மோதல் உச்சம் பெற்றது. இறுதி எச்சரிக்கை நோட்டீஸை மத்திய அரசு அனுப்பியது. இப்போதே உடன்படாவிட்டால் சட்ட ரீதியான விளைவுகளுக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்தது.

ஆனால் அப்போதும் ட்விட்டர் இசையவில்லை. தற்போது வரை விதிகளுக்கு உடன்படுவதாக தெரிவிக்கவில்லை. இச்சூழலில் இரு தினங்களுக்கு முன் ட்விட்டருக்கு வழங்கிய சட்டப் பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இதனால் ட்விட்டர் மீது வழக்குகள் பாய்ந்தன. தற்போது ட்விட்டருக்கு நிலைக்குழு மூலம் அழுத்தம் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான இக்குழுவின் முன்பு ட்விட்டர் அதிகாரிகள் நேற்று ஆஜராகி விளக்கமளித்தனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ட்விட்டரை நிலைக்குழு உறுப்பினர்கள் காய்ச்சி எடுத்துவிட்டனர். தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் குடிமக்கள் உரிமை பாதுகாக்கப்படுவது தொடர்பாக ட்விட்டர் விளக்கமளித்திருக்கிறது. மேலும் நிறுவனத்தின் கொள்கைகளைத் தாங்கள் பின்பற்றுகிறோம் என்று பதிலளித்ததால் நிலைக்குழு உறுப்பினர்கள் கோபமடைந்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற நிலைக் குழுவினர், “உங்கள் நிறுவனத்தின் கொள்கையை விட, நாட்டின் சட்டங்கள் உயர்வானவை” என்று கூறியிருக்கின்றனர். அதற்குப் பின் மத்திய அரசின் சட்டங்களுக்கு நீங்கள் உடன்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.