×

32 இன்ச் டிஸ்பிளேவுடன் பெசல்-லெஸ் வடிவமைப்பில் சியோமி ‘எம்.ஐ டிவி இ32எஸ்’ அறிமுகம்

பெய்ஜிங்: பெசல்-லெஸ் வடிவமைப்பில் சியோமி ‘எம்.ஐ டிவி இ32எஸ்’ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சியோமி நிறுவனம் அதன் இ சீரீஸ் டிவிக்கள் வரிசையில் புதிய ‘எம்.ஐ டிவி இ43கே’ சாதனத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது ‘எம்.ஐ டிவி இ32எஸ்’ டிவியை அறிமுகம் செய்துள்ளது. 32 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பில் இந்த டிவி மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரக மாடலாக இது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சியோமியின் பேட்ச்வால் இன்டர்பேஸ்
 

பெய்ஜிங்: பெசல்-லெஸ் வடிவமைப்பில் சியோமி ‘எம்.ஐ டிவி இ32எஸ்’ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சியோமி நிறுவனம் அதன் இ சீரீஸ் டிவிக்கள் வரிசையில் புதிய ‘எம்.ஐ டிவி இ43கே’ சாதனத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது ‘எம்.ஐ டிவி இ32எஸ்’ டிவியை அறிமுகம் செய்துள்ளது. 32 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பில் இந்த டிவி மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ரக மாடலாக இது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சியோமியின் பேட்ச்வால் இன்டர்பேஸ் இடம்பெற்றுள்ளது. ‘எம்.ஐ டிவி இ43கே’ மாடலில் ப்ளூடூத் அம்சம் இடம்பெறவில்லை. ஆனால் இந்த ‘எம்.ஐ டிவி இ32எஸ்’ மாடலில் ப்ளூடூத் வி4.0 அம்சம் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் 899 யுவான் என்று (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.9500) இந்த டிவியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் சிறப்பம்சங்களாக 178 டிகிரி பார்வை கோணம், குவாட் கோர் பிராசசர், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி, வைஃபை, ஹெச்.டி.எம்.ஐ போர்ட், ஏவி போர்ட், யு.எஸ்.பி போர்ட், 6 வாட் ஸ்பீக்கர், ப்ரீ-இன்ஸ்டால் ஆப்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.