×

பிகாஷூ எடிஷனில் புதிய பவர் பேங்க் – சியோமி அறிமுகம் !

பிகாஷூ எடிஷனில் புதிய எம்ஐ பவர் பேங்கை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. எம்ஐ பவர் பேங்க் 3 பிகாஷூ எடிஷன், 10,000 எம்ஏஎச் லித்தியம் ஐயான் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜர் சப்போர்ட் உடன் வருகிறது. மேலும் இதில் இரண்டு யுஎஸ்பி டைப் ஏ போர்ட்டுகள் உள்ளன. இதன் மூலம், ஒரே நேரத்தில் இரண்டு போர்ட்களில் வெவ்வேறு விதமான இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்திட முடியும். மேலும், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் டைப்
 

பிகாஷூ எடிஷனில் புதிய எம்ஐ பவர் பேங்கை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.


எம்ஐ பவர் பேங்க் 3 பிகாஷூ எடிஷன், 10,000 எம்ஏஎச் லித்தியம் ஐயான் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜர் சப்போர்ட் உடன் வருகிறது. மேலும் இதில் இரண்டு யுஎஸ்பி டைப் ஏ போர்ட்டுகள் உள்ளன. இதன் மூலம், ஒரே நேரத்தில் இரண்டு போர்ட்களில் வெவ்வேறு விதமான இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்திட முடியும்.

மேலும், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் டைப் சி போர்ட்டுகள் தரப்பட்டுள்ளன. இதன் மூலமாக பவர் பேங்கை சார்ஜ் செய்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ள சியோமி, நான்கு மணிநேரத்தில் பவர் பேங்க் முழுவதும் சார்ஜ் செய்திட முடியும் என தெரிவித்துள்ளது.

மேலும் பேட்டரி சார்ஜ் அளவை வெளிப்படுத்தும் விதமாக எல்இடி இண்டிகேட்டர்களும் இதில் உண்டு. இந்த பவர் பேங்கை, இந்திய மதிப்பில் ஆயிரத்து 100 ரூபாய்க்கு சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ள சியோமி, நவம்பர் 5ம் தேதி முதல் சர்வதேச அளவில் இந்த பவர் பேங்க் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

  • எஸ். முத்துக்குமார்