×

முடிவுக்கு வந்த 1 வாரகால மோதல்… மத்திய அரசுக்கு இணங்கிய ட்விட்டர்!

விவசாயிகள் போராட்டம் குறித்த ட்வீட்கள் விவகாரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ட்விட்டர் நிர்வாகத்திற்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கு இருந்துவந்தது. தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஐடி அமைச்சகத்தின் செயலாளருடன் ட்விட்டரின் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையே அதற்குக் காரணம். குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறைக்குக் காரணம் காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என மத்திய அரசு தீர்க்கமாக நம்புகிறது. ட்விட்டர் மூலமே வன்முறை மூட்டப்பட்டு, பரவியது என்பதால் அம்மாதிரியான
 

விவசாயிகள் போராட்டம் குறித்த ட்வீட்கள் விவகாரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ட்விட்டர் நிர்வாகத்திற்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கு இருந்துவந்தது. தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. ஐடி அமைச்சகத்தின் செயலாளருடன் ட்விட்டரின் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையே அதற்குக் காரணம்.

குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறைக்குக் காரணம் காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என மத்திய அரசு தீர்க்கமாக நம்புகிறது. ட்விட்டர் மூலமே வன்முறை மூட்டப்பட்டு, பரவியது என்பதால் அம்மாதிரியான பதிவுகளை இட்ட நபர்களின் கணக்குகளை முடக்க மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இருவேறு உத்தரவுகளில் மொத்தமாக 1,435 கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் சில கணக்குகளை தற்காலிகமாக முடக்கியது. அப்போதே மத்திய அரசு கோபமடைந்தது. அதன்பின் அந்தக் கணக்குகளை மீண்டும் செயல்பட ட்விட்டர் அனுமதித்தது. இதுவே அரசை உச்சபட்ச கோபத்திற்கு உள்ளாக்கியது. ஐடி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்தார். இங்கு தொழில் செய்யுங்கள்; பணம் சம்பாதியுங்கள்; ஆனால் எங்களின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்படுங்கள் என்று காட்டமாகக் கூறினார்.

இதையடுத்து அமைச்சரிடம் ஆலோசனை மேற்கொள்ள ட்விட்டர் அதிகாரிகள் நேரம் கேட்டனர். அதன்படி, இன்று ஐடி அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பிரகாஷ், ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் ட்விட்டரின் துணைத் தலைவர் ஜிம் பேக்கர் கலந்துகொண்டார். அப்போது அவர், “விவசாயிகள் இனப்படுகொலை (#farmersgenocide ) என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு கூறியது. ஆனால் அதனைக் கண்டுகொள்ளமால் மிகவும் தாமதாக நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்கள். உங்களின் இந்தச் செயல் எங்களின் உத்தரவை மதிப்பளிப்பாகததையே காட்டுகிறது” என்றார்.

அதற்குப் பதிலளித்த ட்விட்டர் அதிகாரிகள், “நாங்கள் கருத்துரிமை மதிக்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கருத்துரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர். உடனே குறுக்கிட்ட செயலாளர், தவறான செய்திகளைப் பரப்பி வன்முறைக்கு வித்திடுவது தான் கருத்துரிமையா என்று கேட்டார். “அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தால் உடனே கடைப்பிடிக்க வேண்டும். காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுத்தால் அதனால் என்ன விளைவு நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். காலம் தாழ்த்தினால் அர்த்தமற்றதாகப் போய்விடும்” என்றும் கூறினார்.

செயலாளரின் பேச்சுக்கு மதிப்பளித்து மத்திய அரசுடன் உடன்படுவதாக ட்விட்டர் நிர்வாகிகள் உறுதியளித்தனர். இதனால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது. பேச்சுவார்த்தைக்குப் பின் 1,435 கணக்குகளில் 1,178 கணக்குகளை ட்விட்டர் முடக்கியது.#farmersgenocide என்ற ஹேஸ்டேக் பயன்படுத்திய 257 கணக்குகளில் 220 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ட்விட்டர்-மத்திய அரசு மோதல் விவகாரம் முடிவடைந்திருக்கிறது.