×

”வயர் – வயர்லெஸ் ஆக பயன்படும் 3 இன் 1 இயர்போன்கள்”-மோட்டோரோலா அறிமுகம்

டெக்3 டிரிக்ஸ் என்ற 3 இன் 1 ஹைபிரிட் இயர்போன்களை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இயர்போன்களை வயர்களை கொண்டு இணைத்தோ அல்லது வயர்கள் இன்றி நெக்பேண்ட் போலவோ அல்லது இரண்டு முறை இல்லாமல் இயர் பட்ஸ்களை மட்டும் கழற்றி, டுரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயன்படுத்துபவர்கள் தங்களின் சவுகரியம் மற்றும் வசதிக்கேற்ப இந்த இயர்போனை பயன்படுத்தலாம் என மோட்டோராலா நிறுவனம் தெரிவித்துள்ளது. புளூடூத் 5.0 கொண்ட இந்த இயர்போனை,
 

டெக்3 டிரிக்ஸ் என்ற 3 இன் 1 ஹைபிரிட் இயர்போன்களை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த இயர்போன்களை வயர்களை கொண்டு இணைத்தோ அல்லது வயர்கள் இன்றி நெக்பேண்ட் போலவோ அல்லது இரண்டு முறை இல்லாமல் இயர் பட்ஸ்களை மட்டும் கழற்றி, டுரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயன்படுத்துபவர்கள் தங்களின் சவுகரியம் மற்றும் வசதிக்கேற்ப இந்த இயர்போனை பயன்படுத்தலாம் என மோட்டோராலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புளூடூத் 5.0 கொண்ட இந்த இயர்போனை, சார்ஜிங் கேஸ் மூலமாக சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் வரை இதை பயன்படுத்தலாம் என தெரிகிறது. மேலும் கூகுள் அசிஸ்டெண்ட், அலெக்ஸா மற்றும் சிரி வாய்ஸ் அசிஸ்டெண்ட் சப்போர்ட் இதில் உண்டு என்றும், வாட்ட்ர் ரெசிஸ்டெண்ட் கொண்ட இந்த இயர்போன் பிளிப்கார்டில் 5,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பிளிப்கார்டில் நடைபெற்று வரும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த இயர்போன்கள் அறிமுக சலுகையாக 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் பின்னர் 9,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்