×

2024 ஆம் ஆண்டில் ஆப்பிள் கார் அறிமுகமா? – தகவல்கள் உண்மையா ?

ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் இறங்க உள்ளதாக வெளிவரும் தகவல்கள் உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், கடந்த சில நாட்களாகவே தொழில்துறையில் பேசுபொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்களில், ஆப்பிள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் பேட்டரி காரை அறிமுகம் செய்யும் திட்டம் வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் இறங்க உள்ளதாக 2014 ஆம் ஆண்டிலிருந்தே தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அதிகாரபூர்வமாக ஆப்பிள் எந்த
 

ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் இறங்க உள்ளதாக வெளிவரும் தகவல்கள் உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், கடந்த சில நாட்களாகவே தொழில்துறையில் பேசுபொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்களில், ஆப்பிள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் பேட்டரி காரை அறிமுகம் செய்யும் திட்டம் வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் இறங்க உள்ளதாக 2014 ஆம் ஆண்டிலிருந்தே தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அதிகாரபூர்வமாக ஆப்பிள் எந்த அறுவிப்பையும் வெளியிடவில்லை . இந்த நிலையில், புதிய வகை பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் ஆப்பிள் கார் வெளியாக உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் உலா வருகின்றன.

இந்த நிலையில், முன்னணி பேட்டரி கார் நிறுவனமான, டெஸ்லாவின் நிறுவனர் எலன் மஸ்க் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டர் பதிவில், டெஸ்லா மாடல் 3 தயாரிப்பின்போது, ஒரு நெருக்கடியான நேரத்தில் ஆப்பிள் நிறுவன தலைவர் டிம்குக்கை தொடர்கொண்டேன். டெஸ்லா பங்குகளை வாங்கிக் கொள்ளும் சாத்தியம் உள்ளதா என அவரிடம் கேட்டேன். தற்போதைய சந்தை மதிப்பில் இருந்து 10ல் ஒரு பங்கு விலை கேட்டேன். ஆனால் அந்த சந்திப்புக்கு டிம்குக் மறுத்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

ராய்ட்டர்ஸ் குறிப்புகள் படி ஆப்பிள் நிறுவனத்தின் கார்களின் மோனோசெல் தொழில்நுட்பம் என்கிற வகையிலான பேட்டரி பயன்படுத்தப்படும் என தெரிகிறது. டெஸ்லா நிறுவனம் தனது மீடியம் ரக கார்களுக்கு ஐயர்ன் -பாஸ்பேட் பேட்டரிகளை சீனா ஆலையில் இருந்து தயாரித்து வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், எலக்ட்ரோ ரசாயன முறையிலான மோனோசெல் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெஸ்லா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலர், அங்கிருந்து விலகி ஆப்பிள் நிறுவனத்தின் கார் தயாரிப்பு பிரிவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் இதுவரை தகவல்களை உறுதிபடுத்தாத நிலையில், இந்த தகவல்கள் அடுத்த சில நாட்களுக்கு உலா வந்துகொண்டிருக்கும்.