×

"மெசேஜ் ஸ்மைலிஸ்... கலர்புல்லான சாட் பபுள்ஸ்" - வாட்ஸ்அப் கொடுக்கும் 4 புதிய அப்டேட்கள்!

 

மக்களின் தகவல் தொடர்புக்கான மிக முக்கியமான செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. மற்ற சமூக வலைதளங்களைப் போல் அல்லாமல் பெர்சனலாக நமக்கு வேண்டப்பட்டவர்களிடம் சாட் செய்துகொள்ளலாம். இப்படி பல்வேறு வகையில் மற்றவையிடமிருந்து வாட்ஸ்அப் வித்தியாசப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. பயனர்களின் அனுபவத்தைக் கூட்டும் வகையில் அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வாட்ஸ்அப்  கொடுக்கும்.

அந்த வகையில் நான்கு புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் டெஸ்ட் செய்து கொண்டிருக்கிறது. அவற்றை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. அவை என்னென்ன அம்சங்கள் என பாக்கலாம்...

மெசேஜ் ஸ்மைலிஸ்

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசேஞ்சரில் ஒருவர் செய்யும் மெசேஜ்ஜூக்கு ரியாக்சன் கொடுக்க முடியும். அது காமெடியாக இருந்தால் ஹாஹா ஸ்மைலி, சோகமாக இருந்தால் அழுவது மாதிரியான ஸ்மைலி என நம்முடைய மனநிலையை ரியாக்ட் செய்ய முடியும். தற்போது இந்த ரியாக்சன் ஆப்சனை வாட்ஸ்அப்பிலும் கொண்டுவர பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் விரைவில் ஆன்ட்ராய்டு மட்டும் ஐபோன்களில் வரவிருக்கிறது.

குறிப்பிட்ட நபர்களிடம் எஸ்கேப் ஆகும் அம்சம்

வாட்ஸ்அப்பில் last seen என்ற அம்சம் உள்ளது. அதாவது நாம் கடைசியாக எப்போது ஆன்லைனுக்கு வந்தோம் என நம்முடைய நண்பர்களுக்கு தெரியுமாறு இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது. ஒருசிலருக்கு last seen-ஐ காண்பிக்க கூடாது என்பதால் பிரைவசி செட்டிங்கிஸ் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் தெரியாதபடி இதை மறைக்கலாம். குறிப்பிட்ட நபர்களிடமிருந்து மறைக்க அனைவரையும் வஞ்சிக்க வேண்டியுள்ளது. தற்போது அந்தக் குறையை வாட்ஸ்அப் தீர்க்க போகிறது. ஆம் My contacts except என்ற ஆப்சன் மூலம் குறிப்பிட்ட நபர்களிடமிருந்து லாஸ்ட் சீனை மறைக்க முடியும்.

கலர்புல்லான சாட் பபுள்ஸ்

சாட் பபுள்ஸ் என்றால் நாம் செய்த மெசெஜ் இடம்பெற்றிருக்கும் அந்த பாக்ஸ் தான். அந்த பாக்ஸ் இப்போது செவ்வக வடிவில் இருக்கிறது. இந்த பபுளை பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் மாற்றும்  வகையிலான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

பேக்-கிரவுண்டில் ஒலிக்கும் வாய்ஸ் நோட்

ஒருவர் நமக்கு வாய்ஸ் நோட் அனுப்பினால், அவருடைய சாட்டில் இருந்தால் தான் கேட்க முடியும். அதை விட்டு வெளியேறிவிட்டால் வாய்ஸ் கட் ஆகிவிடும். தற்போது இதனை களையும் பொருட்டு lobal voice message player என்ற அம்சத்தின் மூலம் சாட்டை விட்டு வெளியேறினாலும் அவர்கள் அனுப்பிய வாய்ஸ் நோட்டை நம்மால் பேக்-கிரவுண்டில் கேட்க முடியும். வாட்ஸ்அப்பை விட்டு மொத்தமாக வெளியேறினாலும் கேட்க முடியும் என்பதே புதிய அப்டேட்டின் பிரத்யேக அம்சம்.