×

“மெசெஜ்களை மறைய வைக்கும் மேஜிக் டைமர்” – வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!

மக்களின் தகவல் தொடர்புக்கான மிக முக்கியமான செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. மற்ற சமூக வலைதளங்களைப் போல் அல்லாமல் பெர்சனலாக நமக்கு வேண்டப்பட்டவர்களிடம் சாட் செய்துகொள்ளலாம். இப்படி பல்வேறு வகையில் மற்றவையிடமிருந்து வாட்ஸ்அப் வித்தியாசப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களை தன்னகத்தில் கொண்டிருக்கிறது. பயனர்களின் அனுபவத்தைக் கூட்டும் வகையில் அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொடுக்கும். தற்போது மூன்று புதிய அம்சங்களைக் கொண்டுவரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா என்ற அப்டேட் இன்னும் சில
 

மக்களின் தகவல் தொடர்புக்கான மிக முக்கியமான செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. மற்ற சமூக வலைதளங்களைப் போல் அல்லாமல் பெர்சனலாக நமக்கு வேண்டப்பட்டவர்களிடம் சாட் செய்துகொள்ளலாம். இப்படி பல்வேறு வகையில் மற்றவையிடமிருந்து வாட்ஸ்அப் வித்தியாசப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களை தன்னகத்தில் கொண்டிருக்கிறது.

பயனர்களின் அனுபவத்தைக் கூட்டும் வகையில் அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொடுக்கும். தற்போது மூன்று புதிய அம்சங்களைக் கொண்டுவரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா என்ற அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகவிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மூன்று அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் அம்சம்

பேஸ்புக்கை பொறுத்தவரை நீங்கள் ஒரே சமயத்தில் வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும். ஆனால் வாட்ஸ்அப்பில் அந்த அம்சம் இதுவரை கொடுக்கப்படவில்லை. இருப்பினும் உங்கள் மொபைலும் கணிணியும் அருகருகே இருந்தால் whatsapp web முறையில் லாக்-இன் செய்து பயன்படுத்தலாம். ஒருவேளை உங்களது மொபைலில் பேட்டரி தீர்ந்துவிட்டால், உங்களால் யாருக்கும் மெசெஜ் செய்ய முடியாது. வேறொரு சாதனத்திலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினையைக் களையும் நோக்கில் ஒரே சமயத்தில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களில் பயன்படுத்தும் அம்சம் புதிய அப்டேட்டில் வரவிருக்கிறது.

மெசெஜ்களை மறைய வைக்கும் மேஜிக்

நீங்கள் அனுப்பும் மெசெஜ்களை 7 நாட்களுக்குள் மறைய வைக்கும் அம்சத்தை (disappearing mode) வாட்ஸ்அப் கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த அம்சத்தை மேலும் விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக disappearing mode என்ற புது அம்சத்தைக் கொண்டுவரவிருக்கிறது. இதனை ஆன் செய்து விட்டு யாரிடமாவது நீங்கள் சாட் செய்தால் நீங்கள் விரும்பும் காலத்திற்குள் அந்த மெசெஜ்கள் தானாகவே அழிந்துவிடும். பேஸ்புக் மெசெஞ்சரில் secret conversation என்ற ஆப்சனில் இந்த டைமர் மோட் இருக்கிறது. அதே அம்சத்தை வாட்ஸ்அப்பிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

view once அம்சம்

இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கு போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் அதை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதற்குப் பிறகு அந்த ஃபைல் தானாகவே மறைந்துவிடும். இந்த அம்சமும் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் கொடுக்கப்படவுள்ளது. view once என்ற ஆப்சனை ஆன் செய்துவிட்டால் போதும். அதற்குப் பிறகு நீங்கள் அதனை டெலிட் செய்யவேண்டியதில்லை.

இதனோடு இன்னொரு அம்சமும் கொடுக்கப்படுவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது எதிர்முனையில் இருப்பவர்கள் நமக்கு வாய்ஸ் மெசெஜ் செய்யும்போதே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இந்த புதிய அப்டேட் அடுத்த ஓரிரு மாதங்களில் வெளிவரலாம் என நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கூறியிருக்கிறார்.