×

இந்த ஆண்டில் அதிக ட்விட் போட்டது இவரா? ஆச்சர்யமா இருக்கே?

சமூக ஊடகங்களைப் புறக்கணித்து எந்த வளர்ச்சியும் இல்லை என்ற முடிவுக்கு தொழில் நடத்தும் பலரும் வந்துவிட்டனர். அதேபோல, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் மறக்காமல் தமக்கென சமூக ஊடகப் பக்கங்களை நிர்வகிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அரசியல் பிரபலங்கள் தங்கள் சோஷியல் மீடியா பக்கத்தைக் கையாள ஆட்களை வைத்துக்கொள்வதும் நடக்கிறது. பாஜகவின் ஹெச். ராஜா ஒரு சர்ச்சைக்கு உரிய கருத்தை ட்விட் செய்ய, அது கடும் பிரச்சனையானதும், அந்த ட்விட் என் அட்மின் போட்டது என்று மழுப்பி, நழுவினார். இந்த
 

சமூக ஊடகங்களைப் புறக்கணித்து எந்த வளர்ச்சியும் இல்லை என்ற முடிவுக்கு தொழில் நடத்தும் பலரும் வந்துவிட்டனர். அதேபோல, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் மறக்காமல் தமக்கென சமூக ஊடகப் பக்கங்களை நிர்வகிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

அரசியல் பிரபலங்கள் தங்கள் சோஷியல் மீடியா பக்கத்தைக் கையாள ஆட்களை வைத்துக்கொள்வதும் நடக்கிறது. பாஜகவின் ஹெச். ராஜா ஒரு சர்ச்சைக்கு உரிய கருத்தை ட்விட் செய்ய, அது கடும் பிரச்சனையானதும், அந்த ட்விட் என் அட்மின் போட்டது என்று மழுப்பி, நழுவினார்.

இந்த ஆண்டில் அதிக ட்விட் செய்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் உலகளவில் அதிக ட்விட் செய்தது அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதல் இடத்தில் இருக்கிறார்.

பரபரப்பான அரசியல் தலைவர். உலகமே உற்றுநோக்கும் வல்லரசு நாட்டின் அதிபர். சோஷியல் மீடியாவைக் கையாள ஒரு டீமை வைத்து நிர்வகித்து வருவதாகச் செய்திகள் சொல்கின்றன.

இரண்டாம் இடத்தில் இருப்பது, அமெரிக்காவின் அடுத்த அதிபரான ஜோ பைடன். மூன்றம் ஜார்ஜ் ஃப்ளாய்ட்.

ஏழாம் இடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். பத்தாம் இடத்தில் அமெரிக்காவின் அடுத்த துணை அதிபர் கமலா ஹாரீஸ் இருக்கிறார்.

இந்தியாவில் நடிகர் விஜய் படப்பிடிப்பின் நடுவே ரசிகர்களோடு எடுத்துக்கொண்ட செல்ஃபிதான் அதிக ரீவிட் செய்யப்பட்டிருக்கிறது.

இந்திய அளவில் அதிக லைக்ஸ் வாங்கியது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, தனது மனைவி கர்ப்பமாக இருப்பதைச் சொன்ன ட்விட்.

ட்விட்களில் சாதித்தவர்களின் பட்டியல் ஒவ்வொரு பிரிவிலும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் பல போட்டிகள் நடக்கின்றன.